சனி, 16 ஜூலை, 2011

மனிதனின் மனதில் இன்னும் ஏன் காட்டுமிராண்டி??????

சமிபத்தில் தினமலர்.காம் ல் இன்று வெளிவந்த இந்த புகைப்படம் என்னை மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

கத்தியால் கீறி குழந்தைக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் புகைப்படம் தான் அது.

மனிதன் இன்னும் ஏன் காட்டுமிராண்டியாக இருக்கின்றான்?

குறிப்பு: படத்தினை பெரிதுபடுத்தி காண மவுசின் கர்சரை படத்தின் மீது நிறுத்தவும்.

வெள்ளி, 15 ஜூலை, 2011

லஞ்சத்திற்கு எதிராக நூதன போராட்டம்

நாட்டில் லஞ்சம் மற்றும் ஊழலை எதிர்த்து தினமும் போராட்டங்கள் நடக்கின்றன. அவற்றில் சில நூதனமாகவும் இருப்பது உண்டு.

சமீபத்தில் ஒரு இணையதளத்தில் வெளிவந்த செய்தி, ஒரு சாலைப்பணி ஒப்பந்ததாரர் கன்னியாகுமரி கலெக்டர் அலுவலம் முன்பு ஒரு அரசு அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க வேண்டி பிச்சை எடுத்தது.

விவரம் அறிய கீழே சுட்டவும்.

இவரிடம் லஞ்சம் கொடுக்க பணம் இல்லையாம், அதனால் போராட்டம் செய்தாராம்.

என்ன கொடுமை சார் இது?????!!!!!!!!

திங்கள், 11 ஜூலை, 2011

VIM LIQUID DETERGENT (DISH WASHING GEL) - GUINNESS WORLD RECORD - உண்மையா?

கடந்த சில நாட்களாக தொலைகாட்சிகளில் வரும் ஒரு விளம்பரம் VIM LIQUID DETERGENT நிகழ்த்திய உலக சாதனை பற்றியது.

அது உண்மையா என்று சந்தேகம் வந்தது. என்ன செய்ய? இப்பொழுது வரும் விளம்பரங்கள் அப்படி! நம்பகத்தன்மையே சற்றும் இல்லாதது.

அதை உறுதி செய்துக்கொள்ள GUINNESS WORLD RECORDS இன் வலைத்தளத்துக்கு சென்றேன்.

அதில் இருந்த இந்த சாதனையின் பதிவுகளை பார்த்த பின்பு சற்று மகிழ்ச்சியாய் இருந்தது. அந்த வலைத்தளத்தின் இணைப்பு இதோ கீழே.

http://www.guinnessworldrecords.com/Search/Details/Longest-line-of-washed-plates/54787.htm

இவர்களைப் பார்த்தாவது ஏழு நாட்களில் கருப்பு தோலை சிவப்பாக மாற்றும் என்றும், ஒரு மாதத்தில் வழுக்கையில் முடி முளைக்கும் என்றும் சுய தம்பட்டம் அடிப்பவர்கள் திருந்தி, தானே முன்வந்து மக்களின் முன்பு செயலில் நிருபிப்பார்களா?

Latest News

TrafficG