வெள்ளி, 28 ஆகஸ்ட், 2009

யாருக்காக மழை பெய்கிறது?

அண்மையில் எனக்கு ஆச்சர்யம் அளித்தது பத்திரிக்கையில் வந்த ஒரு செய்தி.

இன்றெல்லாம் மருத்துவமனையில் நுழைந்து வெளியே வந்தாலே ஆயிரங்களில் செலவு வைக்கிறது. ஒரு சிறிய ஜுரம் என்றால் கூட பத்து முறை வர வைத்து சம்பாதிக்கும் மருத்துவர்கள் எராளம்.

இவர்களுக்கிடையில் கடந்த பல ஆண்டுகளாக வெறும் ஐந்து ரூபாய் மட்டுமே வரும் நோயாளிகளிடம் இருந்து பெற்றுக்கொண்டு வைத்தியம் பார்த்து வரும் ஒரு மருத்துவரும் இருக்கின்றார்.

ஜார்கன்ட் மா நில டாக்டர் சியாம் பிரசாத் முக்கர்ஜி என்கிறவர் வெரும் ஐந்து ரூபாய் மட்டுமே பணமாக பெற்றுக்கொண்டு மருத்துவ சேவை செய்து வருகிறார்.

அவரது மருத்துவ பணியின் ஆரம்ப காலத்திலேயே 20 முதல் 30 ரூபாய் வரை பணம் வாங்கிய மருத்துவர்கள் உண்டு. எனினும் எழைகளின் நலம் கருதி இவர் இந்த சேவையை செய்து வருகிறார்.

இவரை போன்ற நல்லவர்கள் இன்னும் உள்ளதால் தான் மழை இன்றும் பெய்கிறது.

மற்றவர்கள் இவரை பார்த்து திருந்துவார்களா?

Latest News

TrafficG