வெள்ளி, 28 ஆகஸ்ட், 2009

யாருக்காக மழை பெய்கிறது?

அண்மையில் எனக்கு ஆச்சர்யம் அளித்தது பத்திரிக்கையில் வந்த ஒரு செய்தி.

இன்றெல்லாம் மருத்துவமனையில் நுழைந்து வெளியே வந்தாலே ஆயிரங்களில் செலவு வைக்கிறது. ஒரு சிறிய ஜுரம் என்றால் கூட பத்து முறை வர வைத்து சம்பாதிக்கும் மருத்துவர்கள் எராளம்.

இவர்களுக்கிடையில் கடந்த பல ஆண்டுகளாக வெறும் ஐந்து ரூபாய் மட்டுமே வரும் நோயாளிகளிடம் இருந்து பெற்றுக்கொண்டு வைத்தியம் பார்த்து வரும் ஒரு மருத்துவரும் இருக்கின்றார்.

ஜார்கன்ட் மா நில டாக்டர் சியாம் பிரசாத் முக்கர்ஜி என்கிறவர் வெரும் ஐந்து ரூபாய் மட்டுமே பணமாக பெற்றுக்கொண்டு மருத்துவ சேவை செய்து வருகிறார்.

அவரது மருத்துவ பணியின் ஆரம்ப காலத்திலேயே 20 முதல் 30 ரூபாய் வரை பணம் வாங்கிய மருத்துவர்கள் உண்டு. எனினும் எழைகளின் நலம் கருதி இவர் இந்த சேவையை செய்து வருகிறார்.

இவரை போன்ற நல்லவர்கள் இன்னும் உள்ளதால் தான் மழை இன்றும் பெய்கிறது.

மற்றவர்கள் இவரை பார்த்து திருந்துவார்களா?

வெள்ளி, 12 ஜூன், 2009

50 ரூபாய்க்கு ஹிந்தி கோர்ஸ்

இந்தியாவின் சிறப்பு எல்லோருக்கும் தெரியும்.

இங்கு பல மொழிகள், மதங்கள், பிரிவுகள் இருந்தும் நாம் அனைவரும் பிற நாடுகளின் ஆச்சர்யத்தை தூண்டும் வகையில் மிக ஒருமைபாட்டுடன் வாழுகிறோம் என்பது அனைவருக்கும் தெரிந்தது.

நமது அத்துணை வேற்றுமைகளையும் நீக்கி உறவு பாலத்தை மேம்படுத்துவது நமது சகோதரத்துவமும் தேச பற்றும் ஆகும்.

நாம் ஒருவரோடு ஒருவர் நமது அன்பையும் பரிமாறிக்கொள்ள ஒரு பொது மொழியும் தேவை படுகிறது.

நாம் பேசும் மொழிதான் பெரிது என்று நினைக்காமல் நாம் பிறரது மொழிக்கும் சேர்த்து மதிப்பளிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

நமது நாட்டில் பெரும்பாலான மக்களால் பேசப்படும் மொழியான ஹிந்தியை கற்று கொள்வது நாம் நம் மொழி அல்லாதவர்களிடமும் உள்ள நல்லுறவை வலுபடுதிக்கொள்ளவும் நமது பண்பாட்டின் பெருமையை அவர்களுக்கு தெரிவிக்கவும் உதவும்.

இத்தகைய பொது மொழியின் அவசியம் உண்மையில் மிகவும் அவசியம் ஆகிறது.

இத்தகைய பொதுமொழியை கற்பது எளிது மற்றும் அன்றி தற்போது வெறும் 50 ரூபாயில் முடியும் காரியம் ஆகிறது.

நடுவண் அரசாங்கத்தால் நடத்தப்படும் இந்த பயிற்சியில் வெறும் 50 ரூபாய்க்கு நாம் ஹிந்தி கற்றுகொள்ளலாம். அதுவும் அவரவர் தாய் மொழியில்.

இந்த பயிற்சி சான்றிதழ், பட்டயம், மேல்நிலை பட்டயம் என்ற மூன்று நிலைகளில் நடத்த படுகிறது.

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்:

Applications may be sent to:
The Deputy Director,
Department of Correspondence Course,
Central Hindi Directorate,
West Block – 7,
R.K. Puram,
New Delhi – 110 066


செவ்வாய், 2 ஜூன், 2009

நாம் வாழும் பூமியை பற்றி ......

அன்றாடம் நம்மை தாங்குகிற பூமியை பற்றி இங்கு எத்தனை பேருக்கு சிறிது அளவேனும் தெரிந்து இருக்கு?

நம்மை நாமே சற்று பரிசோதித்து கொள்ளுவோமா?

பூமியின் வயது சுமார் 4550 மில்லியன் ஆண்டுகள்.

எடை சுமார் 6000 மில்லியன் மில்லியன் டன்கள்.

விட்டம் துருவத்திலிருந்து துருவமாக சுமார் 12714 கிலோ மீட்டர்.

விட்டம் நடுவரை கோட்டின் உடாக சுமார் 12756 கிலோ மீட்டர்.

சூரியனிடம் இருந்து சுமார் 1496 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

சுற்றளவு துருவத்தின் வழியாக சுமார் 40000 கிலோ மீட்டர்.

சுற்றளவு நடுவரை கோட்டின் வழியாக 40076 கிலோ மீட்டர்.

நீரின் பரப்பு சுமார் 362 மில்லியன் சதுர கிலோ மீட்டர்.

நிலபரப்பு 148 மில்லியன் சதுர கிலோ மீட்டர்.

பெருங்கடலின் சராசரி ஆழம் 3795 மீட்டர் கும் அதிகம்.

ஞாயிறு, 31 மே, 2009

சிரிக்கும் புத்தர் !

எல்லோரும் அடிக்கடி கேள்விப்பட்டு இருப்பீர்கள்.

பல வேளைகளில், பல இடங்களில், பல மேஜைகளில் அவரை சிரிப்பும் தொந்தியுமாக பார்த்தும் இருப்பீர்கள்.

"சிரிக்கும் புத்தர்" - யார் இவர்?

இந்த சிரிக்கும் புத்தர்க்கு, ஹோடெய் என்றும் பு தாய் என்றும் பெயர்கள் உண்டு.

இவர் அன்புக்கும், நட்புக்கும், மகிழ்ச்சிக்கும் ஒரு சின்னமாக விளங்குகிறார்.

இந்த சிரிக்கும் புத்தர் என்பவர் ஆயிரம் வருடங்கள் முன்பு வாழ்ந்த "Chaan" என்ற சீன துறவி என்று கருத படுகிறது.

காலங்காலமாக சொல்லப்படுகிற கதைகளில் ஊடாக ஒரு நம்பிக்கையும் இருக்கிறது.

இந்த சிரிக்கும் புத்தரின் தொந்தியை தடவினால் வருங்காலம் வளமும், அதிர்ஷ்டமும், செல்வமும் பெருகும் வகையில் இருக்கும் என்பதே அந்த நம்பிக்கை ஆகும்.

Latest News

TrafficG